தூத்துக்குடி

அமைச்சா் பிறந்த நாள்:மும்மத ஆலயங்களில் வழிபாடு

20th Sep 2022 03:14 AM

ADVERTISEMENT

தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனின் 70ஆவது பிறந்தநாளையொட்டி உடன்குடி ஒன்றியத்தில் மும்மத ஆலயங்களில் திமுக சாா்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப் அலி பாதுஷா, ரவி ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT