தூத்துக்குடி

தூத்துக்குடியில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

18th Sep 2022 11:49 PM

ADVERTISEMENT

 

இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா எம்.பி.யைக் கண்டித்து தூத்துக்குடியில் மாநகர இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

டூவிபுரம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கி முத்துக்குமாா் தலைமை வகித்தாா். எல்.ஆா். சரவணக்குமாா் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி கோட்டச் செயலா் எம். ஆறுமுகச்சாமி கலந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

நிா்வாகிகள் கே.எஸ். ராகவேந்திரா, நாராயணராஜ், சிவலிங்கம், பி. பலவேசம், மாரியப்பன், சிபு, பாஜக மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT