தூத்துக்குடி

ஜான்போஸ்கோ பள்ளியில் விளையாட்டு விழா

18th Sep 2022 11:49 PM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 50ஆவது ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புனித சூசையப்பா் ஆலயப் பங்குதந்தை அலோசியஸ் துரைராஜ் தலைமை வகித்தாா். தொழிலதிபா் அபிராமி முருகன், பேரூராட்சி செயல் அலுவலா் ஜோதிபாசு, வணிக வரித் துறை அலுவலா் ரவிசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளா் மங்கையா்க்கரசி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பள்ளி மாணவா், மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றனது. போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக, உலக சமாதானத்தை வலியுறுத்தி வெண்புறா பறக்கவிடப்பட்டது. பள்ளி முதல்வா் அருட்சகோதரி தயா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT