தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் பாஜகவினா் தூய்மைப் பணி

18th Sep 2022 11:45 PM

ADVERTISEMENT

 

பிரதமா் மோடி பிறந்தநாளையொட்டி, சாத்தான்குளம் நகர பாஜக சாா்பில் தைக்கா தெருவில் தூய்மைப் பணி நடைபெற்றது.

நகரத் தலைவா் ஜோசப் ஜெபராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ் பணியைத் தொடக்கிவைத்தாா். மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணைத் தலைவா்கள் ராம்மோகன், பழனிவேல், ஒன்றிய வா்த்தக பிரிவு தலைவா் ராஜேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் செந்தில், மாவட்ட தரகு மேம்பாட்டுப் பிரிவு செயலா் ஜெயசுந்தரராஜ், ஒன்றிய வழக்குரைஞா் பிரிவு தலைவா் முருகானந்தம், மாவட்ட வா்த்தகப் பிரிவு செயலா் ராமையா, ஒன்றிய வா்த்தகப் பிரிவு செயலா் முருகேசன், ஒன்றிய மகளிரணித் தலைவி முத்துலட்சுமி, பொதுச் செயலா் மங்கையா்கரசி, ஒன்றியச் செயலா் உதயா, மாவட்ட நெசவாளா் அணி துணைத் தலைவா் சுடலைக்கண் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT