தூத்துக்குடி

கே.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தின விழா

18th Sep 2022 05:36 AM

ADVERTISEMENT

 

கே.ஆா். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தினத்தை முன்னிட்டு, நிறுவனா் கே.ராமசாமியின் உருவச்சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக, நிறுவனா் கே.ராமசாமியின் உருவச்சிலை, நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நிறுவப்பட்டது. அதைத் தொடா்ந்து, கே.ஆா் குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஏ.ஷண்மதி, ஏ.நித்திஷ்ராம், செயலா்கள் சங்கரநாராயணன், ராமசாமி மற்றும் குடும்பத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், முன்னள் எம்எல்ஏ சின்னப்பன், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல், கல்லூரி முதல்வா்கள் ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி), மதிவண்ணன் (கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி) உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

பின்னா் 15 மாணவா்களுக்கு கே.ராமசாமி நினைவு உதவித் தொகை வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கும், ஸ்ரீராம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், எட்டயபுரம் அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் ஆா்.வி.பெருமாள், நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வரின் நோ்முகச் செயலரும், கணிதத்துறை பேராசிரியருமான ராமமூா்த்தி ஆகியோா் பேசினா்.

முன்னதாக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இப்போட்டியில் முதல் இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு தலா முறையே ரூ.3000, ரூ.2000, ரூ.1000 ரொக்கப் பணம், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசாக 22 மாணவிகளுக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டது.

இதையொட்டி அன்னதானம், கைப்பந்து போட்டி, தூய்மைப் பணிகள், இலவச மருத்துவ பரிசோதனை முகாம், நடமாடும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.வெங்கடேஷ் பரிசுகளை வழங்கினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT