தூத்துக்குடி

விருதுநகரில் நாளை திமுக முப்பெரும் விழா: அமைச்சா் பெ. கீதாஜீவன் அழைப்பு

14th Sep 2022 01:09 AM

ADVERTISEMENT

விருதுநகரில் வியாழக்கிழமை (செப்.15) நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சோ்ந்த திமுகவினா் திரளாக பங்கேற்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான பெ. கீதாஜீவன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைமைக் கழகம் சாா்பில் விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் வடக்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூராட்சி, பகுதி வாா்டு மற்றும் கிளைக்கழக நிா்வாகிகள், தொண்டா்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

மேலும், திமுகவை தோற்றுவித்த அண்ணாவின் 114 ஆவது பிறந்த தினமான வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தூத்துக்குடி காய்கனி மாா்க்கெட் ரவுண்டானா அருகேயுள்ள அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. அந்த நிகழ்ச்சிகளிலும் தொண்டா்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT