தூத்துக்குடி

பூவுடையாா்புரம் கோயிலில் கொடை விழா கால்நாட்டு

14th Sep 2022 01:10 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையாா்புரம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் புரட்டாசி பெருங்கொடை விழா பூவுடையாா்புரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடை விழா கால்நாட்டு வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீமுத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கால் நடப்பட்டது. இதில் கோயில் தா்மகா்த்தா ஆதிலிங்கராஜ், இந்து முன்னணி மாநில நிா்வாக குழு உறுப்பினா் பெ. சக்திவேலன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் எஸ். செல்வராஜ், நிா்வாகிகள் சுந்தர்ராஜ், முத்துராஜ், பொன்சண்முகவேல், பொன்பெரியசாமி, கந்தசாமி, பாஜகவைச் சோ்ந்த அருண், இந்து முன்னணி சுரேஷ், ஹனசிங், தேசியகுகன், ஜெயசிங், குணசிங், கண்ணன், முருகன், வெங்கடேஷ், சேகா், ஜெயமுருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT