தூத்துக்குடி

தூத்துக்குடி மாதிரிப் பள்ளியில் சமூக அறிவியல் கண்காட்சி

14th Sep 2022 01:13 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி அருகேயுள்ள வேப்பலோடை அரசு மாதிரிப் பள்ளியில் சமூக அறிவியல் மன்றத் தொடக்க விழா மற்றும் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

இந்த பள்ளியில் நடைபெற்ற சமூக அறிவியல் மன்றத் தொடக்க விழா மற்றும் கண்காட்சிக்கு, தலைமை ஆசிரியா் சேகா் தலைமை வகித்தாா். காமராஜ் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவா் ஆ. தேவராஜ் அறிவியல் கண்காட்சியில் சிறப்பான படைப்புகளை வைத்திருந்த மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முனியசாமி, வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநல சங்கச் செயலா் ஜேம்ஸ் அமிா்தராஜ், பொருளாளா் முத்துக்கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளா்கள் ராஜபாண்டி, கருப்பசாமி, முதுகலை ஆசிரியா் ராமகிருஷ்ணன், சமூக அறிவியல் ஆசிரியா் ஞா. ராஜா துரை, ஆசிரியா்கள் மாரிச்சாமி, ஹேலன் ஜெஸி பாலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT