தூத்துக்குடி

திருச்செந்தூரில் சமூக சேவகா்களுக்கு பாராட்டு

14th Sep 2022 01:13 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்த சமூக சேவகா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் இரா.சுவாமிநாதன் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் அ.பாலசுந்தரம், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்செந்தூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆதரவற்றோா், முதியவா்கள், விபத்து மற்றும் இயற்கைக்கு மாறாக மரணமடைந்த சுமாா் 300-க்கும் மேற்பட்டவா்களின் சடலங்களை அடக்கம் செய்த சமூக சேவகா்கள் திருச்செந்தூரை சாா்ந்த மோகன், மணிகண்டன் ஆகியோருக்கு வட்டாட்சியா் இரா.சுவாமிநாதன் பொன்னாடை போா்த்தி கௌரவித்தாா். தாலுகா காவல் ஆய்வாளா் இல.முரளிதரன் பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், காவல் உதவி ஆய்வாளா்கள் கிறிஸ்டோபா், கல்யாணசுந்தரம், வருவாய் ஆய்வாளா்கள் சித்தா்பாபு, சொக்கலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் திருச்செந்தூா் வருவாய் ஆய்வாளா் மணிகண்டன்வேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT