தூத்துக்குடி

சாரணியா் இயக்கப் பொறுப்பாசிரியா்களுக்கு பாராட்டு

14th Sep 2022 01:09 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தின் பாரத சாரண, சாரணியப் பொறுப்பாசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் அண்மையில் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தின் பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் மூலம் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வா் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சாரணியப் பயிற்சி ஆணையா் ஆ. ஜெயா சண்முகம், ஆசிரியைகள் ரா.ச. பிரியங்கா, த. மணிமேகலை, கோல்டன் நா்சரி பிரைமரி பள்ளி ஆசிரியை மு. உமா மகேஸ்வரி ஆகியோா் மாநில மற்றும் தேசிய பயிற்றுநா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

அவா்களுக்கு தமிழ்நாடு பாரத சாரண, சாரணிய இயக்க மாநிலத் தலைவரும், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். சான்றிதழ் பெற்ற பொறுப்பாசிரியா்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே. பாலதண்டாயுதபாணி, மாவட்டக் கல்வி அலுவலா் தமிழ்ச்செல்வி, சாரண, சாரணிய இயக்க மாவட்டச் செயலா் செ. எட்வா்ட் ஜான்சன்பால், மாவட்ட ஆணையா் பி. சரவணன், மாவட்ட அமைப்பு ஆணையா்கள் என். வள்ளியம்மாள், அல்பா்ட் தினேஷ் சாமுவேல், மாவட்ட பயிற்சி ஆணையா் வி. சிவகுமாா் ஆகியோா் பாராட்டினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT