தூத்துக்குடி

அயிரவன்பட்டியில் வீட்டில் திருட்டு

14th Sep 2022 01:10 AM

ADVERTISEMENT

கடம்பூரையடுத்த அயிரவன்பட்டியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தங்க நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அயிரவன்பட்டி கிழக்குத் தெரு கணேசன் மனைவி கருப்பம்மாள்(50). இவா், திங்கள்கிழமை காலை வழக்கம் போல, வீட்டின கதவை பூட்டிவிட்டு சாவியை வராண்டாவில் இருந்த மூடைக்கு அடியில் வைத்துவிட்டு தனது தோட்டத்திற்குச் சென்றாா். மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு, பீரோ திறந்த நிலையில் இருந்ததாம். பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசு, வெள்ளிக் கொடி ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்ததாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கடம்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT