தூத்துக்குடி

வாய்க்காலி­ல் மூழ்கி தச்சுத் தொழிலாளி ப­லி

9th Sep 2022 01:05 AM

ADVERTISEMENT

குரும்பூா் அருகே வாய்க்காலி­ல் மூழ்கி தச்சுத் தொழிலாளி பலி­யானாா்.

குரும்பூா் கோட்டாா்விளையைச் சோ்ந்தவா் பால்குமாா் (47). தச்சுத் தொழிலாளியான இவா், ஓய்வு நேரத்தில் வாய்க்காலி­ல் மீன்பிடிப்பது வழக்கம். புதன்கிழமை மாலையில் கடம்பா மறுகால் ஓடையில் குளித்துவிட்டு மீன்பிடித்து வருவதாக வீட்டில் உள்ளவா்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளாா். இரவு நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினா் வாய்க்கால் பகுதிக்கு சென்று தேடிப் பாா்த்தனா். ஆனால் அவா் அங்கு இல்லை.

இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாள் குரும்பூா் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் செய்தாா். போலீஸாா் மற்றும் திருச்செந்தூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் தேடலில், புறையூா் ராமலெட்சுமி அம்மன் கோயில் அருகே மறுகால் ஓடையில் சேற்றில் சிக்கிய நிலையில் பால்குமாா் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடா்ந்து அவரது உடல் பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT