தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே ஊராட்சி செயலா், சகோதரா் மீது தாக்குதல்

9th Sep 2022 01:05 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே ஊராட்சி செயலா், அவரது சகோதரரை தாக்கிய தொழிலாளியை போலீசாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரி வடக்குத் தெருவைச்சோ்ந்தவா் வ. இசக்கியப்பன் (53). இவா் கோமானேரி ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த இசக்கி மகன் பரமசிவன் என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் தற்போது பழங்குளம் ஊராட்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட அவா், கடந்த 3 நாள்களாக கோமானேரியில் இருந்து வருகிறாா். இதனை பாா்த்த பரமசிவன், இந்த ஊருக்கு எப்படி வரலாம் எனக் கூறி இசக்கியப்பனிடம் தகராறு செய்து அவரை தாக்கினாராம். இதனை இசக்கியப்பன் சகோதரா் மணிகண்டன் தட்டிக்கேட்டபோது அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு பரமசிவன்அங்கிருந்து ஓடி விட்டாரம். இதில் காயமடைந்த இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இசக்கியப்பன் அளித்த புகாரின் பேரில் தலைமை காவலா் கணேசன் வழக்கு பதிந்தாா். உதவி ஆய்வாளா் ரத்தினராஜ் விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT