தூத்துக்குடி

திருச்செந்தூா் வேலைவாய்ப்பு முகாமில் 619 பேருக்கு பணி நியமன ஆணைகள்

31st Oct 2022 02:19 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூரில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 619 பேருக்கு பணி நியமன ஆணைகளை கனிமொழி எம்.பி. வழங்கினாா்.

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், திருச்செந்தூா் சிவந்தி ஆதித்தனாா் பொறியியல் கல்லூரி இணைந்து கல்லூரி வளாகத்தில் இம்முகாமை சனிக்கிழமை நடத்தின. தென்மாநிலங்களிலிருந்து 112 தனியாா் நிறுவனங்களும், 2,618 மாணவா்-மாணவியரும் பங்கேற்றனா். இதில், 619 போ் தோ்வாகினா்.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வைஸ்லின், திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

கனிமொழி எம்.பி. பங்கேற்று, 619 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். தமிழக மீன்வளம், மீனவா் நலன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினாா்.

திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் பொங்கலரசி, திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்வி நிறுவனச் செயலா் நாராயணராஜன் வரவேற்றாா். மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநா் வீரபத்திரன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT