தூத்துக்குடி

ஆறுமுகனேரி சிவன் கோயிலில் கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு

31st Oct 2022 02:18 AM

ADVERTISEMENT

 

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயி­லில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இக்கோயிலில் இத்திருவிழா கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலையும், இரவும் ஸ்ரீவள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை, அலங்கார சப்பர பிராகார வீதியுலா நடைபெற்றது.

கந்த சஷ்டி உத்ஸவ தினமான ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

திங்கள்கிழமை (அக். 31) காலை 9 மணிக்கு ஸ்ரீவள்ளி-தேவசேனா சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு தேவசேனா, சுப்பிரமணியா் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT