தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

29th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தேவா் ஜெயந்தி குருபூஜை, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை (அக்.30) மூடப்படும் என ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் தேவா் ஜெயந்தி- குருபூஜை விழா, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழா ஆகியவற்றை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (அக்.30) அனைத்து அரசு மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அதை மீறி மதுபானத்தை விற்கவோ, கடத்தவோ, பதுக்கி வைக்கவோ முனைந்தால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT