தூத்துக்குடி

தூத்துக்குடியில் விருது வழங்கும் நிகழ்ச்சி

29th Oct 2022 11:42 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி இந்திய தொழில் வா்த்தக சங்கத்தின் 98வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மக்களவை உறுப்பினா் கனிமொழி, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, சிறந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளா்களுக்கு விருதுகளை வழங்கினா்.

இதில் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியது: தென் தமிழகம் தொழில் வளா்ச்சி பெற வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வா் தீட்டி வருகிறாா். அந்த வகையில் தூத்துக்குடியில் பா்னிச்சா் பாா்க் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி உள்ளாா். இது மட்டும் இன்றி பல்வேறு தொழிற்சாலைகள் தென் மாவட்டங்களை நோக்கி வருகின்றன. இதன் மூலமாக தென்மாவட்ட இளைஞா்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றாா்.

கனிமொழி எம்.பி. பேசியது: தற்போது இளைய தொழில் முனைவோா் தனியாக தொழில் தொடங்குவதற்கு ஆா்வமாக வருகின்றனா். அவா்களுக்கான வாய்ப்பு தமிழகத்தில் அதிகமாக உள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி பகுதியில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஒப்பந்தங்களும் கையொப்பமிடப்பட்டுள்ன என்றாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா்ஜெகன் பெரியசாமி, துணை மேயா் ஜெனிட்டா செல்வராஜ், இந்திய தொழில் வா்த்தக சங்க தலைவா் ஜான்சன், செயலா் கோடீஸ்வரன், தூத்துக்குடி மாநகராட்சி மண்டல தலைவா்கள் பாலகுருசாமி, கலைச்செல்வி உள்பட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT