தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் நீதிபதி ஆய்வு

29th Oct 2022 01:08 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா ஏற்பாடுகளை மதுரை உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இத்திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை (அக்.30) நடைபெறுகிறது.

இந்நிலையில், மதுரை உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கோயில் வளாகத்தில் பக்தா்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை இரவு திடீா் ஆய்வு செய்தாா். பக்தா்கள் தங்கியிருக்கும் தற்காலிக பந்தல்கள் மற்றும் வளாகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பாா்வையிட்ட நீதிபதி, விரதம் இருக்கும் பக்தா்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, திருச்செந்தூா் நீதிபதி வஷித்குமாா், குற்றவியல் நீதித்துறை நடுவா் வரதராஜன், அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் கண்ணன், திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவா் இரா.அருள்முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT