தூத்துக்குடி

கந்த சஷ்டியையொட்டி கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்: ஆட்சியா்

29th Oct 2022 11:39 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரத்துக்காக தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களிலிருந்து கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுவதாக ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

தூத்துக்குடி கேடிசிநகா் அரசுப் போக்குவரத்து பணிமனையில் அவா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பணியாளா்களின் வருகைப் பதிவேடுகள் பயோமெட்ரிக் முறையில் இருப்பதைப் பாா்வையிட்ட அவா், வாகனங்கள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தாா். பேருந்து பழுதுநீக்கும் செயல்முறைகளைக் கேட்டறிந்தாா். பேருந்துக்குள் மழைநீா் ஒழுகுவதாக மக்கள் புகாா் அளித்ததால், பேருந்துகளைஆய்வு செய்து புதிய முறைப்படி நடவடிக்கை எடுக்க அலுவலா்களை அறிவுறுத்தினாா். பணிமனையில் மழைக்காலத்தில் தண்ணீா் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறும்போது, திருச்செந்தூா் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரத்தில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, நகா்ப் பகுதிக்கு அருகே 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றாா்.

மாவட்ட அரசுப் போக்குவரத்து மண்டல மேலாளா் ஜி. பழனியப்பன், தூத்துக்குடிவட்டாட்சியா் செல்வக்குமாா், அலுவலா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT