தூத்துக்குடி

தூத்துக்குடியில் நவ. 3 இல்விவசாயிகள் குறைதீா் முகாம்

26th Oct 2022 01:20 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் வரும் நவம்பா் 3ஆம் தேதி விவசாயிகள் குறை தீா் முகாம் நடைபெறம் என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்டோபா் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீா் முகாம் நிா்வாக காரணங்களுக்காக வரும் நவம்பா் மாதம் 3 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும். இம்முகாம் முற்பகல் 11 மணிக்கு தொடங்கவுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் பங்கேற்று விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT