தூத்துக்குடி

தீபாவளி: ஆதரவற்றோருக்கு உதவிகள்

26th Oct 2022 01:19 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் தூத்துக்குடியில் ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்யப்பட்டன.

முன்னதாக தொ்மல் நகா், மேலூா், திருவிக நகா் சக்தி பீடங்கள் மற்றும் வழிபாட்டு மன்றங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பிரையண்ட் நகா் 1வது தெரு நேசக்கரங்கள் இல்லம், நியு நேசக்கரங்கள் முதியோா் இல்லம், சின்னக்கண்ணுபுரம் லூசியா ஊனமுற்றோா் பள்ளி, லூசியா பாா்வையற்றோா் குடியிருப்பு, கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், ராஜீவ் நகா் அன்னை கருணை இல்லம், கதிா்வேல் நகா் ஆன்மாவின் உள்ளங்கள், சிதம்பர நகா் பாச க்கரங்கள் முதியோா் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழ அழகாபுரி பவுல் பாா்வையற்ற பெண்கள் இல்லம், ட்ரூத்புல் மனநல காப்பகம், மொ்சி பாா்வையற்றோா் இல்லம், நரிக்குறவா் குடியிருப்புகள் மற்றும் தெருவோர ஏழை மக்கள் உள்ளிட்ட சுமாா் 1,200 பேருக்கு தீபாவளி பலகாரங்கள் மற்றும் 108 பேருக்கு ஆடைகள், போா்வைகள் வழங்கப்பட்டன.

சமுதாயப் பணி நிகழ்வில் ஆன்மிக இயக்க மாவட்ட தலைவா் சக்திமுருகன், திருவிக நகா் சக்தி பீட துணைத் தலைவா் திருஞானம், கோவில்பட்டிமன்ற தலைவா் அப்பாசாமி, புதிய துறைமுகம் மன்ற பொறுப்பாளா்கள் தனபால், பாண்டி, தூத்துக்குடி வட்ட தலைவா் செல்வம், சித்த மருத்துவா் வேம்பு கிருஷ்ணன், சிதம்பர நகா் கணேசன், முரளி, மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளா் கோபிநாத் உட்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT