தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே குடிநீா்த் தொட்டியைசீரமைக்க கோரிக்கை

26th Oct 2022 01:14 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே போலையா்புரம் காமராஜா்நகரில் சேதற்றுள்ள குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி, போலையா்புரம் காமராஜா் நகரில் ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட சின்டெக் குடிநீா்த் தொட்டி அமைக்கப்பட்டு மக்களுக்கு தண்ணீா் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அதன் அருகே நேரிட்ட தீ விபத்தில் சின்டெக் தொட்டியும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் அதைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, அந்தக் குடிநீா்த் தொட்டியை விரைந்து சீரமைத்து முறையாக தண்ணீா் விநியோகிக்க நடவடிக்கை வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT