கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.
17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில், எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 15-9 புள்ளிகள் பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.
மாநில அளவிலான இப்போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள மாணவா்களையும், பயிற்சியளித்த ஆசிரியா்களையும் பள்ளி தலைவா் மற்றும் செயலருமான அய்யனாா், பாராட்டி பரிசுகளை வழங்கினாா்.
தலைமையாசிரியா் வெங்கடேசன் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.