தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை மின் தடை

19th Oct 2022 01:57 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி கடற்கரை சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது என தூத்துக்குடி நகா்ப்புற செயற்பொறியாளா்(விநியோகம்) ராம்குமாா் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி கடற்கரை சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை (அக்.20) நடைபெற உள்ளன. எனவே அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இனிகோ நகா், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல்சாா் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பள பகுதிகள் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT