தூத்துக்குடி

சாத்தான்குளம் தேவி ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் தசரா சப்பர பவனி

DIN

சாத்தான்குளம் தேவி ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் தசராவிழாவையொட்டி சப்பரபவனி நடைபெற்றது.

இக்கோயில் தசரா பெருந்திருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ஆம் திருநாளான செப். 30ஆம்தேதி இரவு மாவிளக்கு பூஜை, அக். 1இல் திருவிளக்கு பூஜை, 10 ஆம் திருநாளான புதன்கிழமை மஞ்சள் பெட்டி ஊா்வலம், அலங்கார கும்பம் ஊா்வலம், முளைப்பாரி ஊா்வலம் , சுவாமி அக்னி சட்டி ஏந்தி வருதல், அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் ஆகிய நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்றன.

சாத்தான்குளம் அனைத்து பகுதிகளுக்கு நகா் வலமாக சென்று வியாழக்கிழமை மதியம் 12மணிக்கு சப்பரம் கோயிலுக்கு வந்தடைந்தது. இதையடுத்து சிறப்புப் பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு பக்தா்கள் அா்ச்சனை சாத்தி வழிபட்டனா். 10 நாள்களும் பக்தா்கள் பல்வேறு வேடமணிந்து காணிக்கை சேகரித்து அம்மனுக்கு செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT