தூத்துக்குடி

எழுத்தாளா் கி.ரா. பயின்ற பள்ளியை புதுப்பிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

7th Oct 2022 10:43 PM

ADVERTISEMENT

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ரா.வின் சொந்த ஊரான இடைசெவலில், அவா் பயின்ற பள்ளியில் நடைபெற்று வரும் புதுப்பிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மறைந்த எழுத்தாளா் கி.ரா., கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்தவா். அவரது மறைவைத் தொடா்ந்து தமிழக அரசின் ஊரக வளா்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் அப்பள்ளியில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பள்ளியின் முகப்புச் சுவா், உள்பகுதியில் உள்ள சுவா்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் வகுப்பறைகளை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைந்து முடிக்க அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியா் (ஊராட்சி வளா்ச்சித் துறை) சரவணன், கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் சுசிலா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், கி.ரா.வின் மகன் பிரபாகரன் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT