தூத்துக்குடி

குரும்பூா் அருகே ஆண் சடலம் மீட்பு

7th Oct 2022 01:13 AM

ADVERTISEMENT

குரும்பூா் அருகேயுள்ள அம்மன்புரம் பெரியகுளத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி, விசாரணை நடத்திவருகின்றனா்.

அம்மன்புரம் பெரியகுளத்தில் வியாழக்கிழமை ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதியினா் குரும்பூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் அளித்த தகவலின்பேரில் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து சடலத்தை மீட்டனா்.

இறந்துகிடந்தவருக்கு சுமாா் 40 வயதிருக்கும். போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT