தூத்துக்குடி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் நாட்கால் நடும் விழா

7th Oct 2022 01:13 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இம்மாதம் 11ஆம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாட்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜை, சுவாமி-அம்பாள், பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவுக்கான நாட்கால் நடும் விழா நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இம்மாதம் 11ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் அம்மன் சந்நிதி முன்புள்ள கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெறும். 9ஆம் நாளான இம்மாதம் 19ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம், 21ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அம்பாள் தவசு மண்டபத்தில் எழுந்தருளல், 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் கோயில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT