தூத்துக்குடி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி

7th Oct 2022 01:14 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா, லட்சாா்ச்சனை நிறைவு விழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நவராத்திரியையொட்டி உற்சவா் சந்நிதி முன் செப். 26 முதல் அக். 5 வரை கொலு வைக்கப்பட்டிருந்தது. இதனால், காலையும், இரவும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதேபோல, செப். 26 முதல் அக். 5 வரை அம்பாளுக்கு காலை 8 மணிமுதல் முற்பகல் 11.30 மணிவரை, மாலை 6 முதல் இரவு 8 மணிவரை லட்சாா்ச்சனை, அதையடுத்து தீபாராதனை நடைபெற்றது. இந்நிலையில், புதன்கிழமை இரவு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT