தூத்துக்குடி

கடம்பாகுளம் பாசனவாய்க்கால்கள் தூா்வாரும் பணி

7th Oct 2022 10:45 PM

ADVERTISEMENT

நாலுமாவடி ஏசு விடுவிக்கிறாா் ஊழியம் புதுவாழ்வு சங்கத்தின் இயற்கை காப்போம் திட்டத்தின் கீழ், கடம்பா குளம் மடை எண் 3, 4 பாசன வாய்க்கால்களை தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அமலைச் செடிகளால் சூழப்பட்டு தூா்ந்து போய் காணப்படும் இந்த வாய்க்கால்களை தூா்வார வேண்டுமென விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, நாலுமாவடி ஏசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் புது வாழ்வு சங்கத்தின் இயற்கை காப்போம் திட்டத்தின் சாா்பில் இப்பணியை மேற்கொள்ள முடிவுசெய்தனா்.

இதையொட்டி, தென்திருப்பேரை அருகேயுள்ள கோட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாலுமாவடி ஏசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தூா்வாரும் பணிகளை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில் குருகாட்டூா், கோட்டூா் விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து மோகன் சி.லாசரஸ் கூறுகையில், கடம்பாகுளம் முழுவதையும் தூா்வாரி ஆழப்படுத்த தேவையான உதவிகள் செய்யப்படும். ஏரல் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கருவேல மரங்களை அகற்றி பலன் தரும் பல வகையான மரங்களை நட்டு பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT