தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகேபைக் மீது வாகனம் மோதல்: இருவா் பலி

7th Oct 2022 01:12 AM

ADVERTISEMENT

குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்கு வந்த பக்தா்கள் இருவா் விபத்தில் உயிரிழந்தனா்.

நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மனேரி காட்டுநாயக்கா் தெருவைச் சோ்ந்தவா்களான பேச்சி மகன் நாராயணன் (45), பரமசிவன் மகன் முருகேசன் (35) ஆகிய இருவரும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்வை காண்பதற்காக பைக்கில் புதன்கிழமை வந்தனா். பின்னா், அவா்கள் வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஊருக்கு புறப்பட்டனா். அவா்கள், பேய்க்குளத்தை அடுத்துள்ள செங்குளம் - முனைஞ்சிப்பட்டி சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில், காயமடைந்த இருவரையும் அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால், செல்லும் வழியில் நாராயணனும், மருத்துவமனையில் முருகேசனும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT