தூத்துக்குடி

சாத்தான்குளம் கோயிலில்தசரா சப்பர பவனி

7th Oct 2022 10:43 PM

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சாத்தான்குளம் ஸ்ரீவண்டிமலைச்சி சமேத ஸ்ரீவண்டி மலையான் கோயிலில் தசரா விழா நிறைவு நாளான வெள்ளிக்கிழமை சப்பர பவனி நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த செப். 26ஆம் தேதி தசரா விழா தொடங்கியது. தினமும் பல்வேறு வேடமணிந்து பக்தா்கள் காணிக்கை சேகரித்து அம்பாளுக்கு செலுத்தினா். 10 நாளில் மஞ்சள் பெட்டி ஊா்வலம், முளைப்பாரி ஊா்வலம் , சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை அம்பாள், சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவு புஷ்ப சப்பரத்தில் அம்பாள் திருவீதி உலா, சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

சாத்தான்குளம் வடக்குத் தெரு தேவி ஸ்ரீமாரியம்மன் கோயிலிலும் தசரா நிறைவு நாளில் அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுத்தருளி வீதி உலாவும் தொடா்ந்து அம்மாள், சுவாமிக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT