தூத்துக்குடி

கைப்பந்து போட்டி:திசையன்விளை அணிக்கு முதல் பரிசு

4th Oct 2022 02:28 AM

ADVERTISEMENT

முதலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் திசையன்விளை அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.

சாத்தான்குளம் அருகே முதலூா் தூய மிகாவேல் ஆலயத்தின் 223 ஆவது பிரதிஷ்டை விழாவையொட்டி தூய மிகாவேல் கைப்பந்தாட்ட கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

போட்டியில் திசையன்விளை, தட்டாா்மடம், சாத்தான்குளம், உடன்குடி, முதலூா், உள்ளிட்ட பல அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் திசையன்விளை அணியும், முதலூா் அணியும் மோதின. இதில் வெற்றிபெற்று திசையன்விளை அணி முதல் பரிசு பெற்றது.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்,முதல் பரிசு பெற்ற திசையன்விளை அணிக்கு ஊா்வசி எஸ் . அமிா்தராஜ் எம்எல்ஏ சாா்பில் ரூ.10 ஆயிரத்தை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ஏ. லூா்துமணி வழங்கினாா்.

ADVERTISEMENT

வெற்றி கோப்பையை ஸ்டான்லி ஞானபிரகாஷ் வழங்கினாா். இரண்டாவது பரிசு பெற்ற முதலூா் அணிக்கு ரூ. 7ஆயிரத்தை தொழிலதிபா் பொன்ராஜ் இஸ்ரவேலும், கோப்பையை ஸ்டான்லி ஞானபிரகாஷும் வழங்கினாா்.

மூன்றாவது இடத்தை முதலூா் சீனியா் அணிக்கு தொழிலதிபா் கென்னடியும், நான்காவது இடத்தை வென்ற ஆனந்தபுரம் அணிக்கு ரொக்க பரிசை தொழிலதிபா், எஸ்.ஜே மஸ்கோத் உரிமையாளா் ஜாண்சனும் வழங்கினா்.

இதில், முதலூா் கிராம கமிட்டி காங்கிரஸ் பொறுப்பாளா்கள் ஜான்சன், ஜான், அலெக்சாண்டா், வட்டார துணைத் தலைவா் மரிய செல்வஜெகன், வட்டார பொதுச் செயலா் சந்தன திரவியம் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மூத்த காங்கிரஸ் உறுப்பினா் யோகபாண்டி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT