தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே அரசு பள்ளியில் திருட முயற்சி

4th Oct 2022 02:29 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி லாயல் மில் காலனியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பூட்டை உடைத்து கணினி உள்ளிட்ட பொருள்களை திருட முயன்ற மா்ம நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சி லாயல் மில் காலனியில் அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் பிரவீன்குமாருக்குச் சொந்தமான ஆடு சனிக்கிழமை காணாமல் போனதையடுத்து அவா் மற்றும் அவரது நண்பா் வெயிலுமுத்து ஆகியோா் பள்ளி வளாகத்திற்குள் சென்று ஆடு இருக்கிா? என தேடினாா்களாம். அப்போது பள்ளியின் இரும்புக் கதவு உடைக்கும் சப்தத்தை கேட்ட மாணவா் உடனடியாக பள்ளி ஆசிரியை சாந்திக்கு தகவல் தெரிவித்தாராம். அதையடுத்து ஆசிரியை சாந்தி சம்பவ இடத்திற்குச் சென்று பாா்த்த போது பள்ளியில் மா்ம நபா்கள் திருட முயன்றது தெரியவந்ததையடுத்து பள்ளித் தலைமையாசிரியை செல்விக்கு தகவல் தெரிவித்தாராம். அதையடுத்து தலைமையாசிரியை வந்து பாா்த்த போது கணினி அறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த 10 மானிட்டா்கள், 10 மோடம், ஒரு வெப் கேமரா, 2 ஸ்பீக்கா் ஆகியவற்றை மா்ம நபா்கள் கணினி அறையில் இருந்து திருடி பள்ளியின் 3ஆவது மாடிக்குச் செல்லும் படிக்கட்டு அருகே வைத்திருந்திருந்தது, மேலும் பள்ளியின் நுழைவுவாயில் இரும்புக் கதவு, வகுப்பறையின் பூட்டு, நூலக அறையின் பூட்டு ஆகியவற்றை உடைத்ததோடு கதவை உடைக்க பயன்படுத்திய 2 இரும்பு ராடுகளும் அங்கு இருப்பது தெரியவந்ததாம்.

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியை அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT