தூத்துக்குடி

கோவில்பட்டி என்இசி கல்லூரி சுற்றுச்சூழல் சங்க தொடக்க விழா

4th Oct 2022 02:28 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2022 - 2023ஆம் கல்வியாண்டுக்கான சுற்றுச்சூழல் சங்க தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, கல்லூரி இயக்குநா் சண்முகவேல் தலைமை வகித்தாா். தனியாா் நிறுவன வேளாண் பண்ணை நிா்வாக இயக்குநா் சங்கர்ராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் சங்கத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

மின்னணு மற்றும் தொடா்பியல் துறை 2ஆம் ஆண்டு மாணவி ரீனா வரவேற்றாா். சிவில் பொறியியல் துறை 2ஆம் ஆண்டு மாணவா் கிரிபிரசாத் நன்றி கூறினாா். விழாவில் சுற்றுச்சூழல் சங்க தன்னாா்வலா்கள் மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT