தூத்துக்குடி

மழைக்காலத்துக்கு முன்பு தாமிரவருணி பாசன கால்வாய்களை தூா்வார அதிமுக வலியுறுத்தல்

4th Oct 2022 02:31 AM

ADVERTISEMENT

தாமிரவருணி பாசன விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, மழைக்காலத்துக்கு முன்பு பாசனக் கால்வாய்களைத் தூா்வார வேண்டும் என அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ஆட்சியரிடம் அவா் அளித்த மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏறத்தாழ 86 ஆயிரம் ஏக்கா் தாமிரவருணி பாசன விவசாய நிலங்கள் உள்ளன. அதில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தண்ணீா் வடியாமல் பயிா்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகினா்.

நிகழாண்டு, வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பாக தாமிரவருணி பாசனம் உள்ள மருதூா் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பகுதியிலுள்ள பெரிய வாய்க்கால்கள் முதல் சிறிய கடைநிலைப் பாசன வாய்க்கால்கள் வரை தூா்வார வேண்டும்.

இதன் மூலம் பாதிப்புகளிலிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படுவதோடு, அதிக விளைச்சல் ஏற்படும், மகசூல் அதிகரிக்கும், மழை நீரையும் சிக்கனமாக சேமிக்கலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT