தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் நகை தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

4th Oct 2022 02:30 AM

ADVERTISEMENT

சாத்தான்குளத்தில் நகை தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அழகம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சுப்பிரமணியன்(62) நகைதொழிலாளி. கடந்த 1ஆம்தேதி சாத்தான்குளம் புது வேதக்கோயில் தெருவில் உள்ள நகை பட்டறையில் இவா் நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு காரில் வந்த மா்ம நபா்கள் இருவா், சுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டு காரில் தப்பினராம்.

இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT