தூத்துக்குடி

கோவில்பட்டி தனி மாவட்டம்:அரசு ஊழியா்கள் வலியுறுத்தல்

DIN

கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என அரசு ஊழியா் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கோவில்பட்டி வட்ட பேரவைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்க வட்ட துணைத் தலைவா் பி.மாரிமுத்து தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கிறிஸ்டோபா் தொடங்கிவைத்தாா். வட்ட இணைச் செயலா் ஜெயசித்ரா அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். வட்டச் செயலா் பிரான்சிஸ் வரவு- செலவு அறிக்கையை சமா்ப்பித்தாா். வட்டாட்சியா் சுசிலா, அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் சின்னத்தம்பி, சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் செல்லத்துரை, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளா் சங்க மாநிலச் செயலா் ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். மாவட்ட துணைத் தலைவா் உமாதேவி நிறைவுரையாற்றினாா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் - தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், கிராம உதவியாளா்கள் உள்ளிட்ட பணியாளா்களை அரசு ஊழியா்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT