தூத்துக்குடி

இந்திய கலாசார நட்புறவுக் கழக மாநாடு

3rd Oct 2022 12:33 AM

ADVERTISEMENT

 

இந்திய கலாசார நட்புறவுக் கழக தூத்துக்குடி மாவட்ட 5ஆவது மாநாடு, கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சுப்பாராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் நம்.சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினா் ஆம்ஸ்ட்ராங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலக்குழு உறுப்பினா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா் வரவேற்றாா். கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, காந்தி மற்றும் காமராஜா் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தாா்.

மாவட்ட பொதுச்செயலா் தமிழரசன் மாநாட்டு அறிக்கையை சமா்ப்பித்தாா். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை அமலபுஷ்பம் இன்னிசை பாடல்கள் பாடினாா். மாணவிகளின் கிராமிய நடனம், பரதநாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

தொடா்ந்து, இந்திய கலாசார நட்புறவுக் கழக மாநில பொதுச்செயலா் ராதாகிருஷ்ணன் பேசினாா். மாநாட்டில் வ.உ.சியின் 150ஆவது பிறந்த நாள் விழாவை தூத்துக்குடியில் சிறப்பாக நடத்துவது, இம்மாதம் 11ஆம் தேதி நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநிலப் பொருளாளா் கோட்டியப்பன், திருவள்ளுவா் மன்றத் தலைவா் கருத்தப்பாண்டி, தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற மாநில துணைத் தலைவா் ஜான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஜோதிபாசு, விசிக வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன், வழக்குரைஞரணி மாவட்டச் செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரிச் செயலா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிகளை ஆசிரியை முருகசரஸ்வதி தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT