தூத்துக்குடி

உடன்குடியில்...

3rd Oct 2022 12:31 AM

ADVERTISEMENT

 

உடன்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜா் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

உடன்குடி பிரதான பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டார காங்கிரஸ் தலைவா் துரைராஜ் ஜோசப் தலைமை வகித்தாா். காந்தி, காமராஜா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் பி.சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் இரா.நடராஜன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா, மாவட்ட காங்கிரஸ் ஆராய்ச்சிப் பிரிவு தலைவா் முத்துக்குமாா், வட்டார தலைவா் செந்தில்குமாா், நகர காங்கிரஸ் தலைவா் முத்து, உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் அன்புராணி, நகர செயலா் பிரபாகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT