தூத்துக்குடி

பராமரிப்புப் பணி: தூத்துக்குடி3 ஆம் ரயில்வே கேட் மேம்பாலத்தில் இன்றுமுதல் போக்குவரத்து நிறுத்தம்

3rd Oct 2022 12:31 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி 3 ஆம் ரயில்வே கேட் மேம்பாலத்தில் திங்கள்கிழமை (அக். 3) முதல் 10 நாள்களுக்கு வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தூத்துக்குடி கோட்ட பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையின் தூத்துக்குடி உள்கோட்டத்துக்குள்பட்ட மதுரை - தூத்துக்குடி சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள 3 ஆம் ரயில்வே கேட் மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணிகள் திங்கள்கிழமை (அக். 3) தொடங்கி ஏறத்தாழ 10 நாள்கள் வரை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

எனவே, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் போது மேம்பாலத்தின் வழியாக செல்லும் அனைத்துவித வாகன போக்குவரத்தையும் மாற்றுப் பாதையில் இயக்க வேண்டியுள்ளது.

போக்குவரத்து காவல்துறையின் ஒத்துழைப்போடு வாகனங்கள் அனைத்தும் 4 ஆம் ரயில்வே கேட் வழியாகவும், 2 ஆம் ரயில்வே கேட் வழியாகவும் இயக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT