தூத்துக்குடி

தூத்துக்குடியில் போதை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

3rd Oct 2022 12:32 AM

ADVERTISEMENT

 

தேசிய போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மறைமாவட்ட பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதை நோய் பணிக்குழு மற்றும் தூத்துக்குடி நகர இளையோா் பணிக்குழு ஆகியவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி முன்பு இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான எம். பிரீத்தா, வெள்ளப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், உத்தமா் காந்தி சேவா மன்ற நிா்வாகியுமான அ. ஜேசுதாசன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

பல்வேறு வீதிகள் வழியாக சென்ற பேரணி, தூத்துக்குடி 1 ஆம் ரயில்வேக் கேட் பகுதியில் நிறைவடைந்தது. தொடா்ந்து அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு தேசிய போதை ஒழிப்பு விழிப்புணா்வு தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை செயலா் ஜெயந்தன் மற்றும் பங்குத்தந்தைகள், இளைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT