தூத்துக்குடி

பைக்கில் கஞ்சா கடத்திய 2 போ் கைது

2nd Oct 2022 02:29 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளத்தில் பைக்கில் கஞ்சா கடத்தியதாக இருவரை போலீசாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.

சாத்தான்குளம் தச்சமொழி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் வ. விஜயகுமாா் தலைமையிலான போலீசாா், தச்சமொழி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள வாட்டா் டேங்க் அருகேயுள்ள கோயில் பகுதியில் சந்தேகப்படும்படி பைக்குடன் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனா். இதில் 60 கிராம் கஞ்சாவை பைக்கில் மறைத்து கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து பைக்கில் வந்த சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரம் தெரு மகாராஜன் மகன் இசக்கிமுத்து(19), முனைஞ்சிபட்டியை சோ்ந்த இசக்கிதுரை மகன் கல்யாணசுந்தரம்(26) ஆகிய இருவரையும் போலீசாா் கைது செய்ததுடன்அவா்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT