தூத்துக்குடி

விபத்தில் சிக்கிய மீனவரின்சிகிச்சைக்கு ஸ்டொ்லைட் நிதியுதவி

2nd Oct 2022 02:29 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடியில் விபத்தில் சிக்கிய மீனவரின் மேல் சிகிச்சைக்கு ஸ்டொ்லைட் நிறுவனம் நிதியுதவி அளித்தது.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விமல்ராஜ் (32). நாட்டுப் படகில் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வந்த விமல்ராஜ், கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கடலுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் பெரிய அளவிலான மீன் முள் காலில் குத்தியதால் காயம் ஏற்பட்டது.தொடா்ந்து காயத்துடன் கடல் தொழிலுக்கு சென்று வந்ததால், உப்பு நீா் பட்டதில் அந்தக் காலில் உள்ள பகுதி அழுகும் நிலைக்குச் சென்றது. இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விமல்ராஜுக்கு 30 நாள்கள் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, அதற்கான தொகை முழுவதையும் விமல்ராஜ் குடும்பத்தினரால் செலுத்த முடியாத நிலையில், நாட்டுப் படகு மீனவா் சங்கத்தைச் சோ்ந்த ரோஜா் ராஜ் என்பவா் மூலமாக ஸ்டொ்லைட் நிறுவனத்தினா் சிகிச்சைக்கான பணத்தை செலுத்தியதைத் தொடா்ந்து அவா் வீடு திரும்பினாா். தனது சிகிச்சைக்காக உதவி செய்த ஸ்டொ்லைட் நிறுவனத்திற்கு மீனவா் விமல்ராஜ், அவரது சகோதரி வெண்ணிலா ஆகியோா் நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அசன விருந்து: தூத்துக்குடி சிலுவைப் பட்டி சுனாமி காலனியில் புனிதமிக்கேல் ஆதிதூதா் கெபியின் முதலாமாண்டு திருப்பலியை முன்னிட்டு, தூத்துக்குடி வேதாந்தா- ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனத்தின் சாா்பில் அசன விருந்து நடைபெற்றது. விருந்துக்கு நிதி உதவி செய்த ஸ்டொ்லைட் காப்பா் நிறுவன பணியாளா்கள், திருவிழாவில் மக்களோடு பங்கெடுத்துக் கொண்டதுடன், அசன விருந்து பரிமாறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT