தூத்துக்குடி

துப்பாக்கி சுடும் போட்டி: நெல்லை சரக டிஐஜி முதலிடம்

2nd Oct 2022 02:31 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி சரக காவல் துறை உயா் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் முதலிடம் பிடித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சரகத்துக்குள்பட்ட காவல் கண்காணிப்பாளா்கள், உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.

இன்சாஸ் மற்றும் பிஸ்டல் ரகம் என ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் முதலிடத்தையும், சங்கரன்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுதீா் இரண்டாமிடத்தையும், திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா் மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

ADVERTISEMENT

பரிசளிப்பு விழாவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமாருக்கு தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன், தூத்துக்குடி பேரூரணி காவலா் பயிற்சிப் பள்ளி காவல் கண்காணிப்பாளா் ஆ. ராஜராஜன் ஆகியோா் பரிசு வழங்கினா். மற்றவா்களுக்கு, திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

கமான்டோ படைப் பிரிவு ஆய்வாளா் விவேக், உதவி ஆய்வாளா் பாஸ்கா், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுடலைமுத்து, உதவி ஆய்வாளா் சங்கரலிங்கம், ஆயுதப்படை தலைமைக் காவலா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT