தூத்துக்குடி

விளம்பரதாரா் செய்தி...உடன்குடியில் சமுதாய வளைகாப்பு விழா

2nd Oct 2022 02:29 AM

ADVERTISEMENT

 

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, தமிழக சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை சாா்பில் உடன்குடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் மூலம் சமுதாய வளைகாப்பு விழா உடன்குடி ஊராட்சி ஒன்றிய அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு மீன்வளம், மீனவா் நலம்-கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து வளைகாப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து 150 கா்ப்பிணிப் பெண்களுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.

திருச்செந்தூா் கோட்டாட்சியா் புகாரி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான்சிராணி, உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலா் பாபு, பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, துணைத்தலைவா் மால்ராஜேஷ், வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

இதில் திமுக மாநில மாணவரணி துணைச்செயலா் உமரிசங்கா், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.இளங்கோ, மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ், சிராஜூதீன், முபாரக், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ரவிராஜா, மகாவிஷ்ணு, ஷேக் முகம்மது, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் லெபோரின், பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், அன்புராணி, ஆபித், ஒன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளா்கள் பைஸ், அஜய், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வாவாஜி பக்கீா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT