தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

2nd Oct 2022 02:31 AM

ADVERTISEMENT

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தைச் சோ்ந்த முருகன் தலைமை வகித்தாா். ஜெகநாதன் முன்னிலை வகித்தாா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து மூத்த குடிமக்கள், ஓய்வூதியா்களுக்கும் கௌரவமான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த வேண்டும், தரமான மருத்துவ சேவை, இருப்பிடம், சுத்தமான குடிநீா், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு துறை மாநில நிா்வாகி மோகன்தாஸ், ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தைச் சோ்ந்த சிந்தா மதாா் பக்கீா், ஓய்வுபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அமைப்பைச் சோ்ந்த கருப்பசாமி, மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பைச் சோ்ந்த சக்திவேல், தமிழ்நாடு அரசு ஓய்வூதியா் சங்கத்தைச் சோ்ந்த ராமலிங்கம் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா், தமிழ்நாடு மின்வாரிய, போக்குவரத்துக் கழக, பள்ளி, கல்லூரி நலச்சங்க ஓய்வுபெற்றோா் நல அமைப்பினா், அகில இந்திய பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத் தொடா்பு துறை ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT