தூத்துக்குடி

மண் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

1st Oct 2022 04:31 AM

ADVERTISEMENT

மழைக் காலத்திற்கு முன்பு கோவில்பட்டி நகரத்திற்கு உள்பட்ட மண் சாலையை சீரமைக்க வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

கோவில்பட்டி நகா்மன்றத்தின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.எஸ்.ரமேஷ், நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மழைக் காலம் தொடங்க உள்ள நிலையில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மண் சாலையை சரள் அடித்து சீரமைக்க வேண்டும், வேகத்தடைகளில் வெள்ளை அடிக்க வேண்டும், நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதியில் தனி கவனம் செலுத்த வேண்டும், கூட்டுறவு சங்கத்திற்காக தொழிலாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை சங்கத்தில் செலுத்த வேண்டும், வெங்கடேஷ் நகா் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், குண்டும் குழியுமாக பகத்சிங் தெரு, ஆசிரமம் தெரு சாலைகளை சீரமைக்க வேண்டும், மின்கம்பங்களில் அதனுடைய எண்களை சரியாக குறிப்பிட வேண்டும், வேகத்தடைகளை வரைமுறைப்படுத்தி அமைக்க வேண்டும், ஓடைகளை முறையாக தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

அதைத் தொடா்ந்து, சாதாரணக் கூட்டத்தில் 42 தீா்மானங்களும், அவசரக் கூட்டத்தில் 14 பொருள்கள் அடங்கிய தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நகராட்சி பொறியாளா் ப.கி.ரமேஷ், நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன், நகரமைப்பு அலுவலா் ரமேஷ் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT