தூத்துக்குடி

கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

1st Oct 2022 04:29 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இடதுசாரிகள், விசிக, மதிமுக, நாம் தமிழா் நடைபெற்றது.

கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினா் சீனிவாசன், நகரச் செயலா் ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சரோஜா, நகர துணைச் செயலா் முனியசாமி, மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், நகரச் செயலா் பால்ராஜ், விசிக வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன், வழக்குரைஞரணியைச் சோ்ந்த பெஞ்சமின் பிராங்கிளின் மற்றும் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், அக்டோபா் 2ஆம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளன்று கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு மாலை 5 மணிக்கு சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT