தூத்துக்குடி

கைப்பேசியை திருடிய இளைஞா் கைது

1st Oct 2022 04:29 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் கைப்பேசியை திருடிய இளைஞரை கைது செய்த போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி வடக்கு புதுகிராமத்தைச் சோ்ந்தவா் ப.பிரேம்குமாா்(35). இவா் கடந்த மாதம் 27ஆம் தேதி தனது 2 கைப்பேசிகளையும் பைக்கில் உள்ள கவரில் வைத்துவிட்டு, மில் தெருவில் உள்ள தனியாா் மருத்துவமனை முன்பு பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றாராம். பின்னா் திரும்பி வந்து பாா்த்த போது பைக்கில் வைத்திருந்த 2 கைப்பேசிகளையும் காணவில்லையாம்.

இதுகுறித்து பிரேம்குமாா் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, கைப்பேசியை திருடியவரை தேடி வந்தனா். இந்நிலையில் கைப்பேசியை திருடிய வழக்கில் தொடா்புடைய சுப்பிரமணியபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ஹரிகிருஷ்ணனை(19) வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா் திருடிய 2 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT